உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை தேய்பிறை சோமவார பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரிலுள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.கொரோனா எதிரொலியாக, பக்தர்கள் யாரும் கோவிலினுள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்று பிரதோஷ பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !