உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ வழிபாட்டை ஆன்-லைனில் தரிசித்த பக்தர்கள்

பிரதோஷ வழிபாட்டை ஆன்-லைனில் தரிசித்த பக்தர்கள்

சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பிரதோஷ வழிபாட்டை, ஆன்-லைன் மூலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

ஊரடங்கால் கோவில்களில், பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, ஆன்-லைன் வாயிலாக ஒளிபரப்ப, அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டிருந்தார். இதற்கான, இணைய முகவரியுடன், நம் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து, நேற்று மாலை நடந்த பிரதோஷ வழிபாட்டை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஆன்-லைன் வாயிலாக கண்டு தரிசித்தனர். இம்முயற்சி பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !