கொரோனாவில் காக்க பெண்கள் விளக்கேற்றி வலம் வந்து வழிபாடு
ADDED :2076 days ago
கோவை : ஊரடங்கு உத்தரவு காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள கோவில் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் இன்றி பூஜைகள் மட்டுமே நடந்து வருகிறது. கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து மக்களை காக்க, கோவை ராமநாதபுரம் பகுதியில் இரவு நேரத்தில் பெண்கள் விளக்கேந்தியபடி சாலையில் மஞ்சள் நீர் தெளித்து வலம் வந்து வழிபட்டனர்.