150 ஆண்டுகளுக்கு பிறகு பெருமாள் கோவில் தேரோட்டம்
ADDED :5000 days ago
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூரில் பெருமாள் கோவில் தேரோட்டம் 150 ஆண்டுகளுக்குப் பின் நடந்தது.திருவெண்ணெய்நல்லூரில் அகோபில மடத்தை சேர்ந்த கனகவல்லி தாயார் சமேத வைகுண்ட வாசகப்பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடந்தது. கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலாவும், 3ம் தேதி திருக்கல்யாணமும் நடந்தது. 150 ஆண்டுகளுக்கு பின் புதிய தேர் செய்யப்பட்டு (6ம் தேதி) நேற்று முன்தினம் காலை 10.40 மணிக்கு நடந்த தேரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலை 5 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. 7ம் தேதி (நேற்று) சப்தாவர்ணம் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.ஏற்பாடுகளை அகோபில மடத்தின் கவுரவ முகவர் புரு÷ஷாத்தம பட்டாச்சாரியார் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.