உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா நீங்க வேண்டி பனை ஓலையில் எழுதி வழிபாடு

கொரோனா நீங்க வேண்டி பனை ஓலையில் எழுதி வழிபாடு

தஞ்சாவூர்,  கொரோனா நோயிலிருந்து அனைவரையும் விடபட வேண்டியும், உலக நன்மைக்காகவும், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திவ்ய ஞானேஸ்வரர் கோவிலில், பிராத்தனை செய்து பனை ஓலையில், எழுதி மூலவரிடம் வாசித்து, ஓலையை பஸ்பம் செய்து நீர்நிலையில் கரைத்து வழிபாடு செய்தனர்.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் நீங்க வேண்டியும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையை வேண்டியும், உலக நன்மைக்காகவும், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த கோவிலடியில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத திவ்ய ஞானேஸ்வரர் ஸ்வாமி கோவிலில், பிரதோஷ கால பூஜை வேளையில் ஸ்ரீ பூர்வ காரணாகமத்தில் அருளிய வண்ணம் பிராத்தனையை பனை ஓலையில் எழுதி, அதை மூலவர் சன்னதியில் வைத்து, அதையை பஸ்மம் செய்து நீர்நிலையில் கரைக்கப்பட்டு வழிபாடு நடத்தினர்.


இது குறித்து சிவாச்சாரியர் சபரி கூறியதாவது; உலகில் கொடிய நோய்கள், கஷ்டங்கள் ஏற்படும் காலங்களில், பக்தர்களின் கோரிக்கைகளை பனை ஓலையில் எழுதி, அதை சாமியிடம் வைத்து பிரத்தனை செய்த பிறகு, ஓலை எரித்து நீர்நிலைகளை கரைத்தால் நன்மை நடக்கும் என்பது ஐதீகமாக இக்கோவிலில் பின்பற்ற வருகிறது. இதுவரை கொரோனாவிற்காக இரண்டு பிரதோஷ தினத்தில் வழிபாடு செய்யப்பட்டது. வரும் மே5ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !