கோயில் மண்டபத்தில் முட்டை பிரியாணி
ADDED :2016 days ago
மதுரை - மதுரை மாநகராட்சி பூங்கா முருகன் கோயில் சஷ்டி மண்டபத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோருக்கு முட்டை பிரியாணி வழங்கியது குறித்து மாநகராட்சி கமிஷனர் விசாகன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கால் சாலையோர ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர், முதியோர்கள் என 172 பேர் மாநகராட்சியால் மீட்கப்பட்டு சஷ்டி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். கோயில் மண்டபத்தில் அசைவ உணவு சமைக்கவும், உண்ணவும் அனுமதியில்லை. எனினும், அங்குள்ளோருக்கு முட்டை பிரியாணி வழங்கப்பட்டதாக வழக்கறிஞர் முத்துக்குமார் புகாரின்பேரில் விசாரணை நடத்த கமிஷனர் விசாகன் உத்தரவிட்டுள்ளார்.மண்டபம் மேலாளர் குமரேசன் கூறுகையில், இதயம் அறக்கட்டளை சார்பில் முட்டை பிரியாணி வழங்க அனுமதி மறுக்கப்பட்டது. கோயில் மண்டபம் என்பதால் மனநலம் குன்றியோருக்கு முடி திருத்தம் செய்யவும் அனுமதிக்கவில்லை, என்றார்.