உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி கோயில் பணம்

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி கோயில் பணம்

சென்னை: கோயில்களின் உபரி நிதியில் இருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு 10 கோடி ரூபாய் வழங்க ஹிந்து சமய அறநிலைய துறை முதன்மை செயலர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

முதுநிலை கோயில்களின் செயல் அலுவலர்கள் இணை உதவி கமிஷனர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஊரடங்கால் தொழில் வருமானம் இன்றி தவிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவை முதல்வர் நிவாரண நிதியால் பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே முதல்வர் நிவாரண நிதிக்கு இன்று மாலைக்குள் தக்கார், அறங்காவலரின் தீர்மானத்துடன் அறநிலைய துறைக்கு உரிய நிதியை அனுப்ப வேண்டும். பழநி, திருச்செந்துார், மதுரை, திருத்தணி, திருவேற்காடு, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், சமயபுரம், ராமேஸ்வரம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்கள் தலா 35 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். பண்ணாரி, அழகர்கோயில், மருதமலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழநி ஆண்டவர், மாங்காடு, திருப்பரங்குன்றம், சங்கரன்கோவில், சுவாமிமலை, மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில்கள் தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். காஞ்சிபுரம் தேவராஜர், திருவொற்றியூர் தியாகராஜர், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர், மேல்மலையனுார் அங்காளம்மன் உள்ளிட்ட கோயில்கள் தலா 15 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.இந்த 47 கோவில்களின் உபரி நிதியான 10 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !