உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்தில் ஆராதனை விழா

ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையத்தில் ஆராதனை விழா

 புட்டபர்த்தி: புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் தற்போது மூடப்பட்டுள்ளது. சுவாமியின் மகா சமாதி உள்ள ஹாலுக்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. சமூக விலகலை பின்பற்றி இன்று ஆராதனை விழா நடைபெற்றது.

ஸ்ரீ சத்ய சேவா அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்ட்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அன்புள்ள சகோதர சகோதரிகளே, ஆராதனை தின மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகளின், ஸ்ரீ சத்ய சாய் இளம் தூதர்களின் சமூக ஊடகம் துவக்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களின் குணங்களை பகவான் வடிவமைக்கிறார். இந்தியாவில், பகவான் கொள்கையை பின்பற்றி, ஸ்ரீசத்யசாய் சேவா உருவாக்கிய கொள்கை அடிப்படையில், இளைஞர்களுக்கு ஒரு தளத்தை வழங்க முடிவு செய்துள்ளோம். தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு, இசை, சாகசம் போன்ற அனைத்து வடிவங்களையும் நாங்கள் இளைஞர்களுக்கு வழங்குகிறோம். இதன் மூலம் அவர்களை பகவானின் போதனைகளுக்கு அருகில் அழைத்து செல்வதுடன், மனிதகுலத்திற்கான சேவையின் மூலம் சுய கற்றல் மற்றும் குணங்களை வளர்ப்பதற்கான பயணத்தை மேற்கொள்ள அவர்களுக்கு உதவும்.

இளைஞர்களுக்கு பெரிய ஆற்றல் உள்ளது. மாநில, மாவட்ட மற்றும் சமிதி மட்டங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களை மாநிலத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநில தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஸ்ரீ சத்ய சாய் இளம் தூதர்கள், அமைப்பின் எதிர்காலத்தை உறுதி செய்பவர்களாக உள்ளனர். அவர்களின் திறன்களையும் ஆற்றல்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவர்கள், இனி வரும் காலங்களில், பகவான் கொள்கைகளை பரப்பும் ஒளிவிளக்காக மாறுகிறார்கள்.

ஸ்ரீ சத்ய சாய் இளம் தூதர்களின் சமூக ஊடகத்தின் தொடக்கவிழா , ஆராதன மஹோத்ஸவ நாளான இன்று (ஏப்ரல் 24) மாலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நமது வலைத்தளமான www.ssssoindia.org -ல் மாலை 4.00 மணிக்கு இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் யூடியூப் சேனலிலும் (யூடியூப் முகவரி: http://youtu.be/BuuTBVQt1m8) ஒளிபரப்பப்படும். தயவுசெய்து மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பக்தருடனும், குறிப்பாக அனைத்து இளைஞர்களுடனும், ஆண்கள் மற்றும் பெண்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் அவர்கள் அனைவரும் தொடக்க விழாவை நேரடியாக பார்க்க முடியும்.இதை நமது பள்ளிகள் மற்றும் பால் விகாஸ் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் குழுவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் இந்த தகவலை நமது பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களுக்கும் பகிரப்பட வேண்டும் என விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, மும்பையில் உள்ள அகில இந்திய தலைவர் அலுவலகம் சார்பில் வெளியான அறிவிப்பு: மனிதகுலத்தின் நலனுக்காகவும், நாட்டிலும் உலகிலும் பல உயிர்களை பாதித்துள்ள தொற்றுநோயிலிருந்து விரைவாக மீளவும், "கொடுக்கும் மற்றும் மன்னிக்கும்" என்ற நோக்கத்தின் அடிப்படையில் சாய் கயாத்ரி மற்றும் சமஸ்தா லோகா சுகினோ பவந்து என குடும்பத்தினருடன் இணைந்து உச்சரித்து, கடந்த 30 நாட்களை கழித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று (ஏப்ரல் 24ம் தேதி) இந்த "ஆராதனை விழாவில்" பகவானின் தாமரை பாதத்தில், நமது பிரார்த்தனையை அனைவரும் அர்ப்பணிப்போம்.ஆராதனை விழாவின் ஒரு பகுதியாக, ரேடியோ சாய்- இல், சாய் பஞ்சரத்ன கீர்த்தனைகள் காலை 7 மணி முதல் ஒலிபரப்பானது. அகில இந்திய தலைவர் அலுவலகத்திலிருந்து ஒரு சிறப்பு செய்தி காலை 9.45 மணிக்கு எங்கள் வலைத்தளமான http://www.ssssoindia.org மற்றும் நமது நிறுவன யூடியூப் சேனலில் (யூடியூப் முகவரி: http://youtu.be/NZUffeGGH7k)நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.இதனை மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பக்தருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் அவர்களும் நம்முடன் இணைந்து, பகவானின் அருளையும், ஆசியையும் பெறட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !