உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்கு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

வடக்கு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சி, ஏ.பி.சத்திரம் கிராமத்தில் வடக்கு மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கிராமத்தினர், விழா குழுவினர் முடிவு செய்தனர்.


அதன்படி, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 6ம் தேதி காலை 10:00 மணிக்கு புதிய சிலைகள் கரிகோலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு மஹா கணபதி, நவக்கிரஹ ஹோமம், லட்சுமி, கோபூஜை உள்ளிட்டவை நடந்தது.


நேற்று காலை 8:00 மணிக்கு மங்கல இசையும், யாக வேள்வியும், கலசம் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !