உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் நோன்பு துவக்கம்: வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள்

ரமலான் நோன்பு துவக்கம்: வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள்

சென்னை: இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் ஒன்றான, ரமலான் நோன்பு, இன்று(ஏப்.,25) அதிகாலை துவங்கியது.

காலையில், சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைப்பிடிப்பர். இந்த நாட்களில், ஒவ்வொரு நாளும், ஐந்து வேளை தொழுகை மட்டுமின்றி, இரவிலும் சிறப்பு தொழுகை நடத்தி, பிரார்த்தனை செய்வது வழக்கம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால், வழிபாட்டு தலங்களில் கூடுவதற்கு, உலக நாடுகள் தடை விதித்துள்ளன. எனவே, முஸ்லிம்கள், நோன்பு காலத்திலும் தங்கள் வீட்டிலேயே, தொழுது கொள்ள வேண்டும். தமிழக வக்பு வாரியம் சார்பிலும், மசூதிகளுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. மசூதிகளில் தொழுகை நேர அறிவிப்பை மட்டும் மேற்கொள்ளுமாறும், மக்களை கூட்டி தொழுகை நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ரம்ஜான் துவங்கியதையடுத்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்., தலைவர் ராகுல், எம்.பி., ராகுல் உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !