உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மே 7ல் வைகையில் இறங்குவாரா அழகர் : அரசிடம் அனுமதி கேட்பு

மே 7ல் வைகையில் இறங்குவாரா அழகர் : அரசிடம் அனுமதி கேட்பு

மதுரை:மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 7ல் வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியை எளிமையாக நடத்துவதற்கு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.,25) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஊரடங்கால் மே 4ல் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சுவாமி பிரகாரம் உற்ஸவர் சன்னதியில் காலை 9:05 மணிக்கு மேல் 9:29 மணிக்குள் நடக்கிறது. இதை கோயில் இணையதளத்தில் பார்க்கலாம்.வைகையில் கள்ளழகர்மே 5ல் அழகர்கோவில் இருந்து புறப்படும் கள்ளழகர் மே 7ல் அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள வேண்டும். ஊரடங்கால் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கள்ளழகரை வாகனத்தில் கொண்டு சென்று வைகை ஆற்றில் இறங்க செய்வது அல்லது வைகை நீரை அழகர்கோவில் எடுத்துச்சென்று சுவாமியை எழுந்தருள செய்வது, அங்கேயே மண்டூக மகரிஷிக்கு சாபம் விமோசனத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கோயில் நிர்வாகம் அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !