ஒடிசா புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் நடக்குமா?
புரி : ஒரிசாவில் புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளதால், பாரம்பரிய தேர்திருவிழா நடக்குமா ? என கேள்வி எழுந்துள்ளது. .
ஒரிசாவின் கடற்கரை நகரான புரியில் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோவில் ஆண்டு உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான புகழ்பெற்ற தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் நடைபெறும். இந்தாண்டு தோரோட்டத்தை நடத்துவதற்காக கோயில் நிர்வாக குழு உறுப்பினர்களுடன் முதல்வர் நவீன் பட்நாயக் ஆலோசனை நடத்தினார். எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு எல்லா மத வழிபாட்டு நடைமுறை சம்பிரதாயங்களுக்கும் பொருந்தும். இதில் விதிவிலக்கு அளிக்க இடமில்லை. சட்டத்தை மதித்தே ஆக வேண்டும் என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமரிடம் தொலை பேசியில் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.