கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி
ADDED :2025 days ago
திண்டிவனம் : திண்டிவனத்தில் உள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்டவர்களுக்கு அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.
திண்டிவனத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பணியாளர்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் சண்முகம் வீட்டில் நேற்று காலை நடந்தது. திண்டிவனம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வெங்கடசன் முன்னிலையில் அமைச்சர், 55 பேருக்கு அரிசி, மளிகை பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர் முகமதுெஷரீப், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் எழுத்தர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.