திருமங்கலத்தில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
திருமங்கலம்"மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்ததால் திருமங்கலம் என பெயர் பெற்ற இங்கு பழமையான மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை 8:30 மணி முதல் திருமண சடங்குகள் நடத்தப்பட்டன. 9:25 மணிக்கு அம்மனுக்கு சுவாமி சுந்தரேஸ்வரர் மாங்கல்யம் சூட்டினார். இதன் பின் தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள் முன்னிலையில் சங்கரநாராயண பட்டர் தலைமையில் திருக்கல்யாணம் நடந்தது. எஸ்.ஐ.,க்கள் பரமசிவம், பாலமுருகன், சுரேஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அவனியாபுரம்: இங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் பாலமீனாம்பிகை கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. நிர்வாக அலுவலர் மாரியப்பன், பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.
வாடிப்பட்டி: குலசேகரன்கோட்டை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பக்தர்களின்றி நடந்தது.