சித்ரா பவுர்ணமி விழா: கோயில்களில் சிறப்பு பூஜை
ADDED :1985 days ago
கூடலூர்: சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கூடலூர் வீருகண்ணம்மாள் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சர்வ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஊரடங்கு காரணமாக பக்தர்கள் வர தடை இருந்ததால் கோயில் நிர்வாகிகள் மட்டும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூடல் சுந்தரவேலவர் கோயிலில் லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.