/
கோயில்கள் செய்திகள் / ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி என நிறைவு மந்திரம் சொல்வதன் நோக்கம் என்ன?
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி என நிறைவு மந்திரம் சொல்வதன் நோக்கம் என்ன?
ADDED :4945 days ago
சாந்தி என்றால் அமைதி. எங்கும் எப்போதும் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் இந்து தர்மத்தின் அடிப்படை. கலைஞர்கள் நிகழ்த்தும் இயல், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் வாழ்த்துப்பாடல் பாடி முடிப்பது வழக்கம். வான் முகில் வழாது பெய்க வாழிய செந்தமிழ் போன்ற பாடல்களைப் பாடி நாமும் நமது நாடும் உலகமும் நலம் பெறவேண்டும் என்பதே நோக்கம். அரசு நிகழ்ச்சிகளில் தேசியகீதம் இசைப்பதும் இம்மரபைப் பின்பற்றியே செய்யப்படுகிறது. இந்த தர்மத்தை வழிகாட்டியே வேதமும் ஓம் சாந்தி என்று மூன்றுமுறை சொல்கிறது.