உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரம்ஜான் சிந்தனைகள் - 14: மகிழ்ச்சிக்கான வழி எது

ரம்ஜான் சிந்தனைகள் - 14: மகிழ்ச்சிக்கான வழி எது

நாயகத்தின் மனைவி ஆயிஷா அன்றாடம் கணவரின் துணிகளைத் துவைப்பது, அவருக்கு எண்ணெய் தேய்ப்பது, தலை வாருவது, நறுமணம் பூசுவது என பணிவிடைகளை அக்கறையுடன் செய்வார். கணவருக்கு சேவை செய்வது ஒவ்வொரு பெண்ணின் அன்றாடக் கடமை. அது மட்டுமல்ல! கணவர் வேலையாக வெளியே சென்று வருவதற்குள் பொருட்களை ஒழுங்குபடுத்தி துாய்மைப்படுத்துவார். அவரைப் போல பெண்கள் தங்களின் கணவருக்கு சேவை செய்யவும், வீட்டை பராமரிக்கவும் வேண்டும். ஒவ்வொரு பணியிலும் துாய்மை, ஒழுங்கு, அழகு நிறைந்திருக்க வேண்டும். இதனால் வீட்டிற்குள் நுழைந்தாலே மகிழ்ச்சியான மனநிலை அமையும்.

இப்தார்: மாலை 6:37 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:22 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !