அமணீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1976 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, தேவம்பாடி வலசு அடுத்துள்ள பழமையான அமணீஸ்வரர் கோவில். இங்கு, சிவ பெருமான் பார்வதி, கங்காதேவி சமேதராக வீற்றிருக்கும் அபூர்வ கோலத்தில் காட்சியளிக்கிறார். ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவிலில் பக்தர்களை அனுமதிக்காமல், தினப்படி பூஜைகள் மட்டும் நடக்கிறது. விசேஷமான சித்ரா பவுர்ணமி அன்று, அர்ச்சகர் மற்றும் இரண்டு பேர் மட்டும் கோவிலில் சுவாமியை அலங்கரித்து, சிறப்பு பூஜை செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியின் உருவம், சுற்றுவட்டார மக்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்பட்டது.