திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :2056 days ago
காரைக்கால்; திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை இணையதளம் மூலம் ஒளிபரப்பப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணமாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நடை மூடப்பட்டுள்ளது. இருப்பினும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் நலன் கருதி மற்றும் கொரோனா வைரஸிலிருந்து அனைத்து மக்களையும் காத்திட வேண்டி கடந்த இரு வாரங்களாக சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.நேற்று சனிக்கிழமை என்பதால் பல இடங்களில் வைரஸ் பரவி வரும் நிலையில் இயல்பு நிலை திரும்ப வேண்டி சனீஸ்வரருக்கு காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனை தேவஸ்தான வலைப்பக்கத்தில் (www.thirunallarutemple.org) இணைக்கப்பட்டுள்ள YOUTUBE சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.