சன்மார்க்க சங்கம் சார்பில் மக்களுக்கு உணவு வழங்கல்
ADDED :1975 days ago
உடுமலை:உடுமலை யு.கே.பி., நகர் கிழக்குப்பகுதி, மக்களுக்கு அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், உணவு வழங்கப்பட்டது.கொரோனா வால் நாடு முழுவதும் வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள், அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.திருச்சி அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்கார குடில் சார்பில் உடுமலை பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு, உணவு வழங்கப்படுகிறது. அவ்வகையில், உடுமலை யு.கே.பி., நகர் கிழக்குப்பகுதி மக்களுக்கு சோயா சாதம் வழங்கப்பட்டது. அன்னதானத்திற்கான பொருட்களை வழங்கியவர்களுக்கு சன்மார்க்க சங்கம் சார்பில், நன்றி தெரிவிக்கப்பட்டது.