ஆன்மிக சுற்றுலா வந்தோர் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு
ADDED :1975 days ago
கிண்டி: ஆன்மிக சுற்றுலாவுக்கு, தமிழகம் வந்து, சிக்கிய, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தோர், சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, 28 பேர், ஆன்மிக சுற்றுலாவுக்கு, மார்ச்சில் தமிழகம் வந்தனர். மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் சென்று, சென்னை வழியாக பீஹார் செல்ல இருந்தனர். ஊரடங்கால், இவர்கள் செல்ல வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டது. இதனால், கிண்டி, மடுவங்கரையில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், அரசு சார்பில், பீஹார் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, பஸ்சில் காட்பாடி சென்று, அங்கிருந்து, ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.