உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணம்

கோவில் ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணம்

சென்னை : கோவில் பணியாளர்களுக்கு, மேலும், 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஹிந்து சமய அறநிலைய துறை கோவில்களில், தட்டு காணிக்கை பெறும், 2,108 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு ஏற்கனவே, சிறப்பு நிவாரணமாக, 1,௦௦௦ ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், ஒரு கால பூஜை கோவில்களில் உள்ள, 8,340 அர்ச்சகர்கள்; நாவிதர், பண்டாரம், மாலைக்கட்டி, பரிச்சாரகர் போன்ற பணியாளர்களுக்கும், இந்த நிவாரணம் வழங்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு மேலும், 1,000 ரூபாய், திருக்கோவில் நிதியிலிருந்து, நிவாரணமாக வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !