உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாட்டு தலங்களை திறக்க கலெக்டரிடம் மனு

வழிபாட்டு தலங்களை திறக்க கலெக்டரிடம் மனு


திண்டுக்கல்: வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என, திண்டுக்கல் தொழில் வர்த்தகர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மாவட்ட தலைவர் கிருபாகரன் தலைமையில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பது: வழிபாட்டு தலங்களில் குழு குழுவாக 10 பேர் வரை சமூக இடைவெளி விட்டு தரிசிக்க அனுமதிக்க வேண்டும். பெண் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதற்கு வசதியாக டவன் பஸ், மினி பஸ் இயக்க வேண்டும். இரண்டு பேர் மட்டும் சமூக இடைவெளி விட்டு பயணம் செய்யும் வகையில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும். குளிர்சாதன வசதியுள்ள ஜவுளி, நகைக்கடைகள் காலை 9:00 முதல் பகல் 1:00 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்.சிறு, குறு வணிகர்கள், முடி திருத்தும் கடை ஊழியர்களுக்கு வணிகர் நல வாரிய நல நிதியில் இருந்து உதவித் தொகை வழங்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, கூறியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !