ரம்ஜான் சிந்தனைகள் -19: அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்
ADDED :1972 days ago
ஒரு சமயம் நாயகத்தைக் காண ஒருவர் காத்து நின்றார். இதுபற்றி அவரிடம் சொன்ன போது, “அவன் நல்லவனில்லை, இருந்தாலும் உள்ளே வரச் சொல்லுங்கள் என்றார். வந்தவரிடம் பரிவுடன் பேசினார். அவர் சென்ற பிறகு, நாயகத்தின் மனைவி ஆயிஷா, “அவனை விரும்பாத நிலையிலும், அவனிடம் எப்படி இவ்வளவு அன்பாக பேச முடிகிறது?” என்று ஆச்சர்யமுடன் கேட்டார். அதற்கு,“இறைவனின் பார்வையில் கெட்ட மனிதன் யார் தெரியுமா? தன்னோடு ஜனங்கள் உறவாட இடந்தராத அளவில் கொடுமொழி பேசுபவன் தான்,” என்றார் நாயகம். நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் அனைவரிடமும் அன்பு காட்டி மகிழ்வோம்.
இப்தார்: மாலை 6:38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:16 மணி