ரம்ஜான் சிந்தனைகள்- 20: நேர்மைக்கான பரிசு
ADDED :1971 days ago
ஆட்சியாளரான அபூபக்கர் இறையச்சம் மிகுந்தவர். எளிமை, நேர்மை அவருடன் பிறந்தவை. ஆட்சிப் பொறுப்பேற்ற மறுநாளே தான் செய்த துணி வியாபாரத்தை கவனிக்கப் புறப்பட்டார்.அபூபக்கரே! நீங்கள் வழக்க மான பணியில் ஈடுபட்டால் ஆட்சியை கவனிப்பது யார்? எனக் கேட்டார் உமர். ஆட்சியில் இருந்தாலும் என் குடும்பத்தை கவனிக்காமல் இருக்க முடியுமா? துணி வியாபாரம் மூலம் கிடைப்பதன் மூலம் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்றார் அபூபக்கர். தோழர்களுடன் ஆலோசித்த உமர், அரசு கஜானாவில் இருந்து மாதம் தோறும் குடும்பச் செலவுக்கு பணம் அளிக்கத் தொடங்கினார். ஆனால் அபூபக்கர் தன் இறுதிக்காலத்தில் குடும்பத்திற்காக வாங்கிய தொகையை அரசிடமே திருப்பிச் செலுத்தினார். அழியாப்புகழுடன் பெற்றவராக அவர் இருப்பதே நேர்மைக்கான பரிசு.
இப்தார்: மாலை 6:38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:19 மணி