உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் இன்றி நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா

பக்தர்கள் இன்றி நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா

வேலுார்: குடியாத்தம், கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா பக்தர்கள் இன்றி நடந்தது. வேலுார்  மாவட்டம், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு  திருவிழா, ஆண்டு தோறும், மே, 14ல் நடக்கும். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து, இரண்டு லட்சம் பக்தர்கள்  பங்கேற்பர். கொரோனா ஊரடங்கால், இந்தாண்டு சிரசு திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் திருவிழா நடத்த அனுமதிக்கும்படி, கோவில் நாட்டாண்மை சம்பத், கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

இதையடுத்து, ஆகம விதிகளின்படி, ஆறு பேர் மட்டும் பங்கேற்று விழாவை நடத்த வேண்டும். பக்தர்கள் பங்கேற்க கூடாது. சிரசு விழாவை, உள்ளூர்தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்து கொள்ளும்படி கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, அம்மன் சிரசு கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது. சிறிது நேரத்தில் சிரசு இறக்கப்பட்டது. இதில், ஆறு பேர் மட்டும் பங்கேற்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள்  நேரில் பார்க்கும் சிரசு திருவிழா, கொரோனா ஊரடங்கால், ஒரு சம்பிராதயத்திற்காக நடத்தப்பட்டதாக பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !