கஞ்சனூர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு அபிஷேகம்
ADDED :2069 days ago
கஞ்சனூர் : கஞ்சனூர் திருக்கோவிலில் நடராஜ பெருமானுக்கு நடந்த சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் "முக்தி தாண்டவ மூர்த்தி என அழைக்கப்படுகிறார். இந்த நடராஜ பெருமானுக்கு திருவோண நட்சத்திர சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பக்தர்கள் யாரும் இல்லாமல், சிவாச்சாரியார்கள் அபிஷேகத்தை நடத்தினர்.