குன்றத்தில் விசாக திருவிழா நடக்குமா?
ADDED :2066 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் வைகாசி விசாக பால்குட திருவிழா நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இக்கோயிலில் பங்குனி திருவிழா ஊரடங்கால் ரத்தானது. ஒவ்வொரு வைகாசியில் பால்குட விசாகத் திருவிழா நடக்கும். மே 26ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டுடன் துவங்கும். ஜூன் 4ல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோயிலுக்கு வருவர். கொரோனா ஊரடங்கு மே 17 வரையுள்ளது. மேலும் நீடிக்க வாய்ப்புள்ளது. மே 17 க்கு பின் கோயில்கள் திறக்கப்படுவது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. இந்தாண்டு வைகாசி விசாக திருவிழா நடக்குமா என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு உத்தரவையடுத்து விழா முடிவு செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.