திருச்செந்துார் தரிசனத்திற்கு இ - பாஸ்?
ADDED :2054 days ago
திருச்செந்துார்: சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆன்லைன் வாயிலாக, தினமும், 500 பக்தர்கள், இ - பாஸ் பெற்று, தரிசனம் செய்ய அனுமதி வழங்க, அறநிலையத் துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது:சுவாமி தரிசனம் செய்ய, அரசு அனுமதி அளிக்க வேண்டும். அர்ச்சகர்கள், குருக்களையும் அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடித்து, தரிசனம் செய்ய அனுமதித்தால், மக்கள் மத்தியில் வரவேற்பு நிச்சயம் கிடைக்கும். வசதி படைத்த பக்தர்கள் மட்டும், தரிசனம் செய்வதற்கு வழி வகுக்காமல், ஏழை, எளிய பக்தர்களும் தரிசனம் செய்ய வழி வகுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.