கோவில்களை திறக்க கோரிக்கை: பிரதமர் மோடிக்கு கடிதம்
ADDED :1973 days ago
மதுரா: கொரோனா அரக்கனை அழிக்க, தெய்வங்களால் மட்டுமே முடியும் என்பதால், கோவில்களை திறக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, அகில பாரதிய தீர்த்த புரோஹித் மகாசபாவின் தேசிய தலைவர், மகேஷ் பதக், பிரதமர் நரேந்திர மோடிக்கு, இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளார். மனிதர்களின் கலங்கிய மனதிற்கு ஆறுதல் அளிப்பது, கோவில்கள் மட்டுமே. எனவே, அவற்றை மீண்டும் திறக்க வேண்டும். கோவில்கள் மூடப்பட்டிருப்பது, அவற்றை பராமரிக்கும் பூசாரிகளின் பொருளாதார நிலையை மோசமாக பாதித்துள்ளதால், அவர்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என, கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.