கோவில் மீது விழுந்த மரம்: வெட்டி அகற்றிய மக்கள்
ADDED :2039 days ago
பந்தலுார்: பந்தலுார் அருகே, மழவன் சேரம்பாடியில் மாரியம்மன் கோவில் மீது மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதில், மழவன் சேரம்பாடியில் உள்ள மாரியம்மன் கோவில் மீது, பெரிய கற்பூர மரம் அடியோடு சாய்ந்து விழுந்தது. தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் மரம் வெட்டி அகற்றப்பட்டது. மேலும், தாளூர் சோதனை சாவடியில், கேரளா மாநில எல்லையில் போலீசார் பயன்படுத்திய தண்ணீர் தொட்டி காற்றில் கீழே விழுந்து உடைந்தது.