கொரோனா நோய் விலக கூட்டு பிரார்த்தனை
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டியில், கொரோனா நோய் தொற்று உலகை விட்டு அகல அனைத்து சமுதாயத்தினர் சார்பில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்தது.
புனித இடைவிடா சகாய அன்னை ஆலயத்தின் எதிரே உள்ள பள்ளி விளையாட்டரங்கில் நடந்த பிரார்த்தனைக்கு ஆலய பங்கு தந்தை அற்புதராஜ் தலைமை தாங்கினார்.ஜூம்மா மசூதி பள்ளி வாசல் முத்தவல்லி பஷீர் அகமது முன்னிலைவகித்தார். கிறிஸ்தவ சமூக தலைவர் விக்டர் வரவேற்றார்.பிரார்த்தனையில் அவரவர் சமுதாய வழக்கப்படி, கொரோனா நோயிலிருந்து மக்களை விடுவிக்க சேவை பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், அனைத்து அரசு துறை அதிகாரிகள், பத்திரிகை துறையைச் சேர்ந்த அனைவரையும் பாதுகாக்க வேண்டியும், நோய் உலகை விட்டு விலக வேண்டியும் சிறப்பு சமூக இடைவெளியோடு பிரார்த்தனை செய்தனர்.ஜெயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர் கவிதா, சாந்தி நிலையம் ஜெயஜோதி, ஜூம்மா மசூதி பள்ளி வாசல் செயலர் அப்துல் சலாம், நிர்வாக செயல் அலுவலர் அஷரப் உசேன், வர்த்தகர் சங்க தலைவர் ராஜபாண்டியன், ஏரி நீர் பாசன சங்க நிர்வாகி நடராஜன், பங்கு சபை சகோதரர் பிரபாகரன், வனத்தையன் மற்றும் விக்கிரவாண்டி பங்கு மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.