உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்- 26: சொர்க்கம் அன்பிலே!

ரமலான் சிந்தனைகள்- 26: சொர்க்கம் அன்பிலே!

எல்லா உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும் என நாயகம் ஒருமுறை தோழர்களுக்கு அறிவுரை கூறினார்.  ‘‘ஒரு பெண்மணி பூனை ஒன்றை வளர்த்தாள். அதை சுதந்திரமாக திரிய அனுமதிக்க மாட்டாள். பட்டினி போட்டு கொடுமை செய்வாள். ஒருநாள் நோய்வாய்ப்பட்ட அவளின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இப்போது நரகத்தில் அவள் துன்பப்படுகிறாள். அதே சமயத்தில் பாலைவனத்தில் ஒரு மனிதர் சென்று கொண்டிருந்தார். வழியில் உள்ள கிணற்றின் அருகில் தாகத்தால் ஒரு நாய் சோர்ந்து கிடந்தது. அதைக் கண்ட இரக்கப்பட்ட அவர் தண்ணீர் கொடுக்க முயற்சித்தார். தன் ஆடையை ஒரு கயிற்றில் கட்டி கிணற்று நீரில் நனைத்தார். அதை  பிழிந்து நாய்க்கு புகட்டினார். இந்த ஒரே ஒரு நற்செயலால் அவர் இறந்த பின்னர்  சொர்க்கத்தில் வாழும் பேறு பெற்றார்’’ என்றார்.

இப்தார்: மாலை 6:41 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:33 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !