வைகாசி பூஜைகள் முடிந்து சபரிமலை நடை அடைப்பு
ADDED :1965 days ago
சபரிமலை: சபரிமலையீல் ஐந்து நாள் நடத்த வைகாசி மாத பூஜைக்கு பின் நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.
14 மாலை 5.00 மணிக்கு நடை திறந்தது. அன்று பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மே 15 முதல் நேற்று வரை தினமும் அதிகாலை 5.00 மணி முதலல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை திறந்திருந்தது. காலையில் அபிஷேகம், கணபதி ஹோமம், உஷ பூஜையும் மாலை தீபாராதனையும் நடந்தது. நேற்று இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.