உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சூரில் மழை வேண்டி சிறப்பு பூஜை

மஞ்சூரில் மழை வேண்டி சிறப்பு பூஜை

மஞ்சூர்:  மஞ்சூர் அருகே மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. மஞ்சூர் அருகே ஹிரியோடைய்யா கோவிலில் ஆண்டு தோறும் படுகரின மக்கள் பாரம்பரிய உடை அணிந்து மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்துவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடக்கிறது. நடப்பாண்டு சிறப்பு பூஜை, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளி கடைபிடிக்கும் நோக்கில் எளிமையாக நடந்த திட்டமிட்டனர். அதன்படி, நேற்று நடந்த சிறப்பு பூஜையில், 14 ஊர் தலைவர் போஜா கவுடர் தலைமையில், ஆறு ஊர் தலைவர் மாதா கவுடர், முள்ளிமலை ஊர்தலைவர் போஜன் முன்னிலையில் சிறப்பு பூஜை சமூக இடைவெளி கடைப்பிடித்து எளிமையாக நடத்தி முடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !