உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையில் வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்

பூஜையில் வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்

முக்கனிகளில் ஒன்றான வாழை வழிபாட்டில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.  வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு அதன் தனித்தன்மையே காரணம். வாழைமரம் ஒருமுறை மட்டுமே குலை தரும். அது போல மனிதப் பிறவியும் நமக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகும்.


இப்பிறவி தப்பினால் கடவுளை அடைந்து, பிறவித்துன்பம் நீ்ங்கி, உலகத்தில் நாம்படும் அவஸ்தைகள் எல்லாம் மாறுவதற்கு வாய்ப்பு இனியும் கிடைப்பது அரிது. அதானால் தான், ‘இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?’ என்று அருளாளர்கள் கடவுளிடம் முறையிடுகிறார்கள். ‘அரிது அரிது மானிடர் ஆதல் அரிது’ என்று அவ்வையும் நமக்கு அறிவுறுத்துகிறார். எடுத்த மானிடப் பிறவிக்கு பயன் வேண்டும் என்று எண்ணுபவர்கள் கடவுளைச் சரணாகதி அடைவது தான் ஒரே வழி. வாழை ஒருமுறை மட்டுமே குலை தள்ளி, கடவுளுக்கு நிவேதனமாவது போல, நாமும் ஒருமுறை கிடைத்த இந்த மனிதப்பிறவியை அவனை அடையவே அர்ப்பணிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !