பற்றிக் கொண்டால் பயமில்லை!
ADDED :2048 days ago
ஒருமுறை புகழ் பெற்ற பாடகர் சாங்க்கியுடன், அவரது இளைய மகன் உயரமான மலைப்பாதையில் நடந்து சென்றான். சிறுவனுக்கு தான் அணிந்த பெரிய கோட்டின் மீது அளவில்லாத ஆசை. தன் இரண்டு கைகளையும் கோட்பைக்குள் திணித்தபடி பெருமையுடன் நடந்தான்.
‘‘மகனே! மழை பெய்ததால் எங்கும் சகதியாக இருக்கிறது. கால்கள் சறுக்கி விடாமல், என் கைகளை பிடித்துக் கொள்’’ என்றார். சிறுவனோ கோட்பையிலிருந்து கைகளை எடுக்காமல் அலட்சியத்துடன் நடந்தான்.
சகதியில் தடுமாறி விழுந்ததில் முழங்காலில் அடிபட்டது. தந்தையின் சொல் கேளாததால் அனுபவம் பாடம் கற்றுத் தந்தது. இனி வரும் காலத்தில் தந்தையின் கைகளைப் பற்றி நடக்க தீர்மானித்தான்.
பிள்ளைகளாகிய நாமும் ஆண்டவரின் கைகளைப் பற்றிக் கொண்டால் வாழ்க்கைப் பாதையில் பயமின்றி செல்லலாம்.