திருப்பரங்குன்றம் விசாக பால்குட திருவிழா ரத்து
ADDED :2250 days ago
திருப்பரங்குன்றம், ஊரடங்கால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாக பால்குட திருவிழா ரத்து செய்யப்பட்டது.இத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமந்துவரும் பால் ஆறுமுகம் கொண்ட சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்தாண்டு மே 26ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டுடன் திருவிழா துவங்கி ஜூன் 5ல் நிறைவு பெற இருந்தது. மே 31 வரை ஊரடங்கு என்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதனால் இத்திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் துணை கமிஷனர் ராமசாமி தெரிவித்தார்.