மாகாளியம்மன் கோவிலுக்கு புதிய சிம்ம வாகனம் தயார்
ADDED :16 hours ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோவிலுக்கு புதிய சிம்ம வாகனம் தயார் நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டில், மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி திருவிழா, நவராத்திரி, சித்திரை திருவிழா உள்ளிட்ட உத்சவ நாட்களில் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா செல்ல வாகனம் இல்லாமல் இருந்தது.
இதனால், மாகாளியம்மன் வீதியுலா செல்வதற்காக புதிதாக சிம்ம வாகனம் செய்ய கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி, 5 அடி உயரம், 6 அடி நீளத்தில் அத்தி மரத்தில், புதிதாக சிம்ம வாகனம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
இனி வரும் உத்சவ நாட்களில், மாகாளியம்மன் புதிய சிம்ம வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்வு நடக்கும், என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.