உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னிரு கருடசேவை விழா விருதையில் கோலாகலம்

பன்னிரு கருடசேவை விழா விருதையில் கோலாகலம்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் 30 பெருமாள் கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய பன்னிரு கருடசேவை விழா விமர்சையாக நடந்தது.

புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையொட்டி, விருத்தாசலம் கடைவீதி, வாசவி மகாலில் நேற்று காலை பட்டாபிராமர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை மங்கள வாத்தியங்களுடன் 200 பாகவதர்கள் இணைந்து திவ்யநாம சங்கீர்த்தன பஜனை பாடினர்.

தொடர்ந்து, சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கருடசேவை விழா துவங்கியது. இதில், வரதராஜ பெருமாள், வாசவி மகால் பட்டாபிராமர், பெரியார் நகர் ராஜகோபால சுவாமி, ரெட்டிகுப்பம் சீனிவாச பெருமாள் மற்றும் வண்ணாங்குடிகாடு, எரப்பாவூர், சாத்தியம், விளாங்காட்டூர், மன்னம்பாடி, க.இளமங்கலம், கோவிலுார் உட்பட 30 கோவில்களில் இருந்து பெருமாள் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீராமஜெயம், கோவிந்தா கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர்.

இதனால், வழக்கமாக கடைவீதி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !