உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் கிருத்திகை விழா: தங்க தேரோட்டம்

அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் கிருத்திகை விழா: தங்க தேரோட்டம்

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம் இன்று இரவு நடந்தது.


அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு மாதமும் கிருத்திகையன்று தங்க தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த மாத தேரோட்டம் இன்று  நடந்தது. இரவு 7:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. வள்ளி தெய்வானை சமேதரராக முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தங்கத்தேர் உட்பிரகாரத்தில் உலா வந்தது. தேர் மின்னொளியில் ஜொலித்தது. முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள், முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர் கணேசமூர்த்தி, கட்டளைதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !