பழநியில் போகர் ஜெயந்தி விழா
ADDED :1978 days ago
பழநி: பழநி கோயிலில் சித்தர் போகரின் ஜெயந்திவிழாவை, முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பழநி முருகன் நவபாஷான சிலையை வடிவமைத்தவர் சித்தர் போகர். இவர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். அவரது ஜெயந்திவிழாவை முன்னிட்டு மலைக்கோயில் போகர் சன்னதியில் அவர் வணங்கிய புவனேஸ்வரி அம்மன், பச்சை மரகத லிங்கத்திற்கு, பால், பழங்கள், பன்னீர், சந்தனம், விபூதி உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து,மகா தீபாராதனை பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடாதிபதி ஸ்ரீமத் போகர் பழநி ஆதீனம் அவர்கள் ஆசி வழங்கினார்.