உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துாரில் பக்தர்கள் கூட்டம் இல்லை: கடல் உள்வாங்கியது

திருச்செந்துாரில் பக்தர்கள் கூட்டம் இல்லை: கடல் உள்வாங்கியது

திருநெல்வேலி : திருச்செந்துாரில் நேற்று காலையில், கடல் உள்வாங்கியது. துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் கடல் நீர், நேற்று காலை, 7:00 முதல், 10:00 மணி வரை உள்வாங்கி காணப்பட்டது. புவுர்ணமி, அமாவாசை தினங்களில் கடல் உள்வாங்குவது வழக்கமான ஒன்றாகும்.சுனாமி பாதிப்பிற்கு பின், கடல் நீர் உள்வாங்குவது வழக்கமாக உள்ளது. ஊரடங்கு காரணமாக, கோவிலில் வழிபாடுகள் நடக்காததால், பக்தர்கள் கூட்டம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !