கோவில்களை திறக்க கோரி தோப்பு கரணம் போட்டு போராட்டம்
ADDED :2057 days ago
திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன் தமிழகத்தில் கோவில்களை திறக்க வலியுறுத்தி தோப்புகரணம் போட்டு போராட்டம் நடந்தது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வழிபாட்டிற்காக கோவில்களை திறக்க கோரி இந்து முன்னணி சார்பில் உடுமலை மாரியம்மன் கோவில் முன்பு தோப்பு கரணம் போட்டு போராட்டம் செய்தனர். இதேபோல் ஊட்டி பஸ்நிலையம் அருகே , பாறை மூனிஸ்வரர் கோயில், விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில், திருப்பூர், விஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன் இந்து முன்னணி சார்பில் தோப்புகரணம் போட்டு போராட்டம் செய்தனர்.