மதுரையில் வைத்தீஸ்வரர் பூஜை
ADDED :2249 days ago
மதுரை, மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் வைத்தீஸ்வரர், பாலாம்பிகை பூஜை நிர்வாகி ராமநாதன் தலைமையில் நடந்தது. ஆரோக்கிய நலனுக்காக நடந்த பூஜையில் ஆதிசங்கரர் அருளிய வைத்தியநாத அஷ்டகம், அம்பிகை அஷ்டகம், வள்ளலாரின் சிகாமணி மாலை, மருந்து பதிகம், திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம், திருநீற்று பதிகம் உள்ளிட்டவை பாடப்பட்டன. நிர்வாகி ஜெனினி ரத்னேஸ்வரி மங்கள ஆரத்தி செய்தார்.