திண்டுக்கலில் ரம்ஜான் தொழுகை
ADDED :1959 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தினர். முஸ்லிம்களின் முக்கிய பண்டிகை ரம்ஜான். இதையொட்டி மசூதிகள், ஈக்தா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதனால் திண்டுக்கல்லில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகள், மொட்டை மாடியில் சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு தொழுகை நடத்தினர். பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்துார், வத்தலக்குண்டு, நத்தத்திலும் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.