உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாலயம், மசூதிகளை திறக்க கலெக்டரிடம் மனு

தேவாலயம், மசூதிகளை திறக்க கலெக்டரிடம் மனு

புதுச்சேரி ; தேவாலயங்கள், மசூதிகளை மக்கள் வழிபாட்டிற்கு திறக்க வேண்டும் என, கலெக்டரிடம், பா.ஜ., சார்பில் மனு அளிக்கப்பட்டது.புதுச்சேரி மாநில பா.ஜ., சிறுபான்மையினர் அணி தலைவர் விக்டர் விஜயராஜ் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் அருணை நேற்று சந்தித்து பேசினர். அப்போது, அனைத்து மசூதிகள், தேவாலயங்கள், சமண கோவில்கள் மற்றும் பிற மத பிரார்த்தனை, வழிபாட்டு தலங்களை பக்தர்கள் வழிபாட்டுக்கு திறக்க வேண்டும் என, மனு அளித்தனர்.பா.ஜ., சிறுபான்மை அணி மாநில பொதுச் செயலாளர் அமானுல்லா, பொறுப்பாளர்கள் அத்புல் பஷீர், ரவி பிரான்சிஸ், சார்லஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !