வடலுார் சத்திய ஞான சபையில் மாத பூசம்: பக்தர்கள் ஏமாற்றம்
ADDED :1957 days ago
வடலுார்; வடலுார் சத்திய ஞான சபையில், மாத பூசம் காண வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வடலுார் சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தன்று ஜோதி காண்பிப்பது வழக்கம். ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாதப் பூசம் என்பதால், பக்தர்கள் தரிசனம் காண ஆர்வத்துடன் சபை முன் திரண்டிருந்தனர். ஆனால் சபை கதவுகள் திறக்கப்பட வில்லை. இரவு 8.30 மணி வரை காத்திருந்து கதவு திறக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.