குரு சித்தானந்தா கோயிலில் 183 வது குருபூஜை விழா
ADDED :1957 days ago
புதுச்சேரி: கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த கோவிலில், ஸ்ரீமத் குரு சித்தானந்தா சுவாமிகளின் 183ம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
குரு சித்தானந்தா கோயிலில் 183 வது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. விழாவில் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கோவில்களில் தரிசனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் குருபூஜை விழாவினை, ஜெய் கிருஷ்ணா சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் யூ டியூப் மற்றும் தேவஸ்தான வலைதளமான gurusithanandaswamy.org ஆகிய வெப்சைட்டில் குருபூஜை விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவசேனாதிபதி குருக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.