உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித யாத்திரை மானியம் பெற 264 பேர் தேர்வு

புனித யாத்திரை மானியம் பெற 264 பேர் தேர்வு

சென்னை: மானசரோவர், முக்திநாத்திற்கு, 2018 – 19ல், புனித யாத்திரை சென்றவர்களில், அரசு மானியம் பெற, 264 பேரை, அறநிலையதுறை தேர்வு செய்துள்ளது. சீனாவில் உள்ள

மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் தலங்களுக்கு, புனித யாத்திரை சென்றவர்களுக்கு, மானியம் வழங்கும் திட்டத்தை , அறநிலையதுறை செயல்படுத்தி வருகிறது.


மானசரோவர் பயணித்தவர்களுக்கு, தலா, 40 ஆயிரம் ரூபாயும், முக்திநாத் பயணித்தவர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாயும், அரசு மானியமாக வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, 500 பேர் வரை பயன் பெறுகின்றனர். அதன்படி, மானசரோவர், முக்திநாத் தலங்களுக்கு, 2018- – 19ல் யாத்திரை சென்று, மானியம் கோரி விண்ணப்பித்தவர்களில் , 264 பேரை, அறநிலையதுறை தேர்வுசெய்து, அதற்கான பட் டியலை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !